பொறுமையும், விட்டுக் கொடுத்தலும் அன்பின் அடையாளம்

சமீபத்தில் எங்கள் வீட்டில் ஒரு நிகழ்ச்சிக்காக மண்டபம், சமையல் ஏற்பாடு செய்தோம்.  முதல் நாள் இரவு சப்பாத்தி, தோசை ஏற்பாடு செய்திருந்தோம். தோசை என்பதால் பெரிய அடுப்பின் மேல் தோசை வார்க்க வசதியுடன் இருந்ததை  உபயோகம் செய்தார்கள். ஒரு பிரிவு மக்கள் சாப்பிட்டவுடன் அடுத்து யாரும் வராததால் கல்லை அணைத்து விட்டார்கள் – காஸ் சேமிப்பு. பின்னர் நாங்கள் சாப்பிட சென்றோம். எங்களுடன் சில உறவினர்களும் வந்தார்கள். தோசை கல் மீண்டும் உபயோகிக்க அது சூடாக வேண்டும். இதற்கு கொஞ்சம் கால தாமதம் ஆனது.

அதற்குள் சில உறவினர்கள் பொறுமை இழந்து சமையல்காரரைத் திட்டி, சாப்பிடாமல் எழுந்தார்கள். எங்களுக்கு மிக மன வேதனையைத் தந்தது.

இந்நிகழ்ச்சி என் மனதில் சில கேள்விகளைக் கிளப்பியது.

எனக்குத் தெரிந்து வார இறுதி நாட்களில் எந்த ஹோட்டல் சென்றாலும் உட்கருவதற்கே பத்து முதல் பதினைந்து நிமிடம் காத்திருக்க வேண்டும். உட்கார்ந்தாலும் நம்மிடம் என்ன வேண்டும் என்று கேட்க பத்து நிமிடம் ஆகும். பின்னர் கண்டிப்பாக பத்து முதல் பதினைந்து நிமிடம் நாம் கேட்டது வரும் வரை காத்திருக்க வேண்டும் – நீங்களும் இதை ஒத்துக் கொள்ளுவீர்கள் என் நம்புகிறேன்.

நாம் காசு கொடுத்து சாப்பிட போகும் இடத்தில் இவ்வளவு பொறுமை காக்கும் நம்மால், நம் உறவினர் சுப நிகழ்ச்சியில் பொறுமை காக்காமல் அவர்கள் மனதையும் புண்படுத்தி, இந்த தாமத்தைப் பெரிய விஷயமாக்குகிறோம், ஏன் என்று எனக்குப் புரியவில்லை!

இதே நட்பு வட்டத்தில் நடக்குமானால் "டேய்  பரவயில்லடா…" என்பதுதான் முதலில் வரும். அங்கு "ஈகோ" விற்கு இடமில்லை. விட்டுக்கொடுக்கும் மற்றும் ஒத்துழைக்கும் (உதவி செய்வது இறுதி) மனமே அன்பு கொண்ட நெஞ்சம்.

என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி சூழலில் ஒருவரின் கண்ணியம்மிக்க செயல்பாடே அவரின் மீது மதிப்பைக் கூட்டும். மாறாக நடந்தால் அவர்கள் ஆறறிவு படைத்த மனிதர்களா என்ற சந்தேகம் தான் எழும்!

Advertisements

2 பதில்கள் so far »

 1. 1

  Prasanna said,

  >>விட்டுக்கொடுக்கும் மற்றும் ஒத்துழைக்கும் (உதவி செய்வது இறுதி) மனமே அன்பு கொண்ட நெஞ்சம்.

  முற்றிலும் உண்மை.

  ஆம். பொறுமையின் அவசியத்தை அனைவரும் உணரவேண்டும். உறவினரை பொறுத்தவரை, இது நம் வீட்டு நிகழ்ச்சி. நம் தான் இதை சிறப்பிக்க வேண்டும் என்ற நினைப்பு வேண்டும். நிலயை புரிந்து நடக்க வேண்டும். நண்பர்களிடம் இது default ஆஹா உள்ள குணம்!

 2. 2

  suresh said,

  sorry da.. i didn’t attent that function


Comment RSS · TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: