இருக்கையில் புரிதல்…

விருமாண்டி படத்தில் கமல் சொல்லும் வசனத்தில் தொடங்குகிறேன்…

“சந்தோம்சன்னா என்னாங்கிறத அதை அனுபவிக்கும் போது தெரியரதுயில்லீங்க…”

எவ்வளவு பெரிய உண்மை…வாழ்க்கையில் பல விஷயங்களை…அதன் அருமையை…அது நம்மிடம் இருக்கும் போது நாம் புரிந்து கொள்வதில்லை.

பள்ளிகளில் படிக்கும் போது அது மிக கஷ்டமானதாகத் தோன்றியது…இப்போது அது எவ்வளவு இனிமையான காலம் என்று புரிகிறது. அது போலத்தான் இப்போது நெருக்கடி மிகுந்ததாகத் தெரியும் இந்த வாழ்க்கையின் அருமையும் பின்னால் வயதான பின்…முதுமையும் நோயும் கூடும் காலத்தில் தெரியும்….

எப்பொழுது நாம் நிகழ் காலத்தில் வாழ்க்கையின் இனிமையைப் புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் நாம் வாழத்துவங்குகிறோம்….

சந்தோசம்…..வாழ்க்கை இவை தவிரவும் பல விஷயங்களை அதன் இல்லமையில் தான் அருமையை அறிகிறோம்.

அம்மா…அப்பா….வும் கூட இதில் அடக்கம்….”அம்மா உன்னை நல்லா பார்த்துக்காமப் போயிட்டேனே” என்ற அலறலைத்தான் சுடுகாடுகளில் நிதம் கேட்கிறோம்…. அவள் இருக்கும் வரை அவளின் அருமை தெரிவதில்லை…

கோடையில் சூரியனைத் திட்டவும்…..வாடையில் பனியைத் திட்டவும் நாம் தவறுவதில்லையே….அவை இருக்கும் போது நாம் அனுபத்திருக்கிரோமா…என்பது கேள்விதான்.

அலுவலகங்களில் கூட நான் இந்தப் போக்கைப் பார்க்கிறேன்…நன்றாக வேலை செய்பவனை அவன் சென்ற பின் புரிந்து என்ன பயன்?….வேலையில் இருக்கும் போது அவன் மேல் பளுவை சுமத்தி, அவன் செய்யும் வேலையின் தன்மை தெரியாமல்… சந்தேகப் பட்டு….பாராட்டாமல்…அவனாக வெளியில் செல்ல வழிவகுத்து பின்….அவன் அருமையைப் புரிவதில் என்ன லாபம்?

மிக கடினமாக திட்டமிட்டு….ஒரு கணவன் மனைவி விடுமுறையைக் கொண்டாட ஒரு மலை வாசத்தலத்திற்கு சென்றார்கள்…..காலைப் பனி…எங்கும் இயற்கை கொட்டிக்கிடக்கிறது….மனைவிக்கோ தீடிரென ஒரு சந்தேகம்….வீட்டில் கேசைப் பூட்டினோமா, இல்லையா என்று…அவளால் அந்த இயற்கையை ரசிக்கமுடியவில்லை…..ஒரு வழியாக பத்து நாட்களுக்குப் பிறகு வீடு வந்து சேர்கிறர்கள்…அப்பொழுதான் தெரிகிறது…அவர்கள் கிளம்பிய அன்று காலை காலியான சிலண்டரை அவள் கணவன் மாற்றவேயில்லை இன்று…..இதற்குக் கவலைப்பட்டு அருமையான விடுமுறையை அனுபவிக்காமல் விட்டுவிடோமே என்று வருந்துகிறாள்…..என்ன பயன்….

இப்படித்தான் நம்மில் பலர் நிகழ்கால வாழ்க்கையை அனுபவிக்காமலும்…அதன் அருமை தெரியாமலும்….ஓடிக்கொண்டிருக்கிறோம்…. தயவு செய்து நில்லுங்கள்…இருக்கும் போது அதன் அருமை தெரியாமல்…..காலியான சிலிண்டருக்கு…வாழ்க்கையை இழக்காதீர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: