தொகுப்புக்காக Tamil

பாரதி நினைவு நாள் (செப்டம்பர் 11)

image

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு ந‌ல்ல‌து வேண்டும்

நெருங்கின‌ பொருள் கைப்பட‌வேண்டும்

க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்

Courtesy: http://nchokkan.wordpress.com/2009/09/11/bharathi/

மறுமொழிகள் (1) »

வாழ்க்கை எதைக் கற்றுக் கொடுக்கிறது!

வாழ்க்கை எதைக் கற்றுக் கொடுக்கிறது, எதை தலைமுறை கற்றுக் கொள்கிறது என்பது பற்றிய ஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் – இந்த வாரம் ஆனந்த விகடனில்,

"வாட் இஸ் இட்" – குறும் படம்…

புல்வெளிக்கு நடுவில் உள்ள பெஞ்சில் ஒரு வயதான அப்பாவும் அவரது மகனும் உட்கார்ந்து  இருக்கிறார்கள். மகன் நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறான். அப்பாவுக்கு அறுவது வயது இருக்கலாம். புல்வெளியைப் பார்த்தபடியே இருக்கிறார். அப்போது எங்கிருந்தோ ஒரு குருவி வந்து மரக் கிளையில் உட்காருகிறது. அதை அப்பா கவனமாகப் பார்க்கிறார். குருவி தாவிப் பறக்கிறது. அது என்னவென்று மகனிடம் கேட்கிறார். அவன் குருவி என்று சொல்லிவிட்டு பேப்பர் படிக்கிறான். அவர் மறுபடியும் அதையே பார்த்துக்கொண்டு இருந்து விட்டு, அது என்னவென்று கேட்கிறார்.

அவன் குருவி என்று அழுத்தமாக சொல்கிறான். இப்போது குருவி பறந்து புல்வெளியில் உட்கார்ந்து வாழ் அசைக்கிறது. அப்பா மறுபடியும் அது என்னவென்று கேட்கிறார். மகம் சற்றே எரிச்சலுடன் "குருவிப்பா  ….கு…ரு…வி" என்று ஒவ்வொரு எழுத்தாகச் சொல்கிறான். குருவி ஒரு கிளை நோக்கிப் பறக்கிறது. அப்பா மறுபடி கேட்கிறார். அது என்ன? மகன், "குருவி…குருவி…என்று உங்களுக்கு எத்தனை முறை சொல்றது" என்று கோபத்தில் வெடிக்கிறான்.

அப்பா மௌனமாக வீட்டுக்குள் சென்று உள்ளே இருந்து  தனது பழைய டைரி ஒன்றை எடுத்த அவனிடம் நீட்டி "உரக்கப் படி" என்கிறார். அவன் சத்தமாகப் படிக்கிறான்.

"என் மகனுக்கு மூன்று வயதாகிய பூத்து அவனை பூங்காவுக்கு அழைத்துப் போனேன். அங்கே ஒரு குருவி வந்தது. அது என்னவென்று என் பையன் கேட்டான். குருவி என்று பதில் சொன்னேன். அவன் அதை உற்றுப் பார்த்துவிட்டு மருபாடியும் கேட்டான். நான் அதே உற்சாகத்துடன் குருவி என்றேன். திருப்தி அடையகத என் மகன் இருபத்தி ஓரு முறை அதே கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் சந்தோசமான குரலில் அது குருவி என்று சொல்லி அவனைக் கட்டிக் கொண்டேன்." என்று அந்த டைரியில் உள்ளது.

டைரியை படித்து முடித்த மகன், அப்பா போல ஏன் பொறுமையாகத் தன்னால் பதில் சொல்ல முடியவில்லை என்று உணர்தவன் போல, அப்பாவின் தலையைகே கோதி அவரைக் கட்டிக் கொள்கிறான். அத்துடன் படம் முடிகிறது.

முதியவர்க்களின் கேள்விகள் அறியாமையில் இருந்து வருவது இல்லை, மற்றாக ஆதங்கத்தில் இயலாமையில், பயத்தில் இருந்தே உருவாகிறது என்பதை நாம் ஏன் மறந்துபோனோம் என்பதை இப்படம் நினைவூட்டுகிறது.

மறுமொழி அளிக்கவும் »

பொறுமையும், விட்டுக் கொடுத்தலும் அன்பின் அடையாளம்

சமீபத்தில் எங்கள் வீட்டில் ஒரு நிகழ்ச்சிக்காக மண்டபம், சமையல் ஏற்பாடு செய்தோம்.  முதல் நாள் இரவு சப்பாத்தி, தோசை ஏற்பாடு செய்திருந்தோம். தோசை என்பதால் பெரிய அடுப்பின் மேல் தோசை வார்க்க வசதியுடன் இருந்ததை  உபயோகம் செய்தார்கள். ஒரு பிரிவு மக்கள் சாப்பிட்டவுடன் அடுத்து யாரும் வராததால் கல்லை அணைத்து விட்டார்கள் – காஸ் சேமிப்பு. பின்னர் நாங்கள் சாப்பிட சென்றோம். எங்களுடன் சில உறவினர்களும் வந்தார்கள். தோசை கல் மீண்டும் உபயோகிக்க அது சூடாக வேண்டும். இதற்கு கொஞ்சம் கால தாமதம் ஆனது.

அதற்குள் சில உறவினர்கள் பொறுமை இழந்து சமையல்காரரைத் திட்டி, சாப்பிடாமல் எழுந்தார்கள். எங்களுக்கு மிக மன வேதனையைத் தந்தது.

இந்நிகழ்ச்சி என் மனதில் சில கேள்விகளைக் கிளப்பியது.

எனக்குத் தெரிந்து வார இறுதி நாட்களில் எந்த ஹோட்டல் சென்றாலும் உட்கருவதற்கே பத்து முதல் பதினைந்து நிமிடம் காத்திருக்க வேண்டும். உட்கார்ந்தாலும் நம்மிடம் என்ன வேண்டும் என்று கேட்க பத்து நிமிடம் ஆகும். பின்னர் கண்டிப்பாக பத்து முதல் பதினைந்து நிமிடம் நாம் கேட்டது வரும் வரை காத்திருக்க வேண்டும் – நீங்களும் இதை ஒத்துக் கொள்ளுவீர்கள் என் நம்புகிறேன்.

நாம் காசு கொடுத்து சாப்பிட போகும் இடத்தில் இவ்வளவு பொறுமை காக்கும் நம்மால், நம் உறவினர் சுப நிகழ்ச்சியில் பொறுமை காக்காமல் அவர்கள் மனதையும் புண்படுத்தி, இந்த தாமத்தைப் பெரிய விஷயமாக்குகிறோம், ஏன் என்று எனக்குப் புரியவில்லை!

இதே நட்பு வட்டத்தில் நடக்குமானால் "டேய்  பரவயில்லடா…" என்பதுதான் முதலில் வரும். அங்கு "ஈகோ" விற்கு இடமில்லை. விட்டுக்கொடுக்கும் மற்றும் ஒத்துழைக்கும் (உதவி செய்வது இறுதி) மனமே அன்பு கொண்ட நெஞ்சம்.

என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி சூழலில் ஒருவரின் கண்ணியம்மிக்க செயல்பாடே அவரின் மீது மதிப்பைக் கூட்டும். மாறாக நடந்தால் அவர்கள் ஆறறிவு படைத்த மனிதர்களா என்ற சந்தேகம் தான் எழும்!

மறுமொழிகள் (2) »

கற்றதனால் ஆன பயன்…

எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்திர்கள்
கலாச்சாரத்தைக் கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிக்கைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்கள் சம்பாத்யத்தின்
பெரும் பகுதியை வரிஎனப் புடுங்கினீர்கள்
நங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டினீர்கள்
"இந்திய ஒளிர்கிறது"  என
விளம்பரம் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோசம் தானா சகோதரர்களே ?
உங்கள் சட்டைகளைப் பற்றிக்
கேட்கிறோம்…
"கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?"

இந்த வாரம் "ஆனந்த விகடனில்" வந்த கவிதை – எழுதியவர் : செல்வேந்திரன்

மறுமொழிகள் (2) »

கவிதை: வாழ்க்கைச் சக்கரத்தில் கணிப்பொறி வல்லுநராய் நான் !

கவிதை: வாழ்க்கைச் சக்கரத்தில் கணிப்பொறி வல்லுநராய் நான் !

மறுமொழிகள் (3) »

தமிழில் எழுதுங்கள் ! கூகிள் உதவியுடன் !!!

தமிழில் blog எழுதுவது சற்று சிரமம்தான், ஆங்கில கீபோர்டில் டைப் செய்வது கடினம். ஆனால் இனிமேல் அதை எளிதாக செய்ய முடியும்.

கூகிளின் இந்த தளத்தை உபயோகியுங்கள், மிக அருமையான படைப்பு.
http://www.google.com/transliterate/indic/Tamil

வாழ்த்துக்கள் கூகிள்.

மறுமொழிகள் (8) »

யார் ஏழை?

என்கிட்ட நிறைய பேர் கேப்பாங்க, “நீ ஏன் வெளிநாட்டுக்குப் போகல? அங்கே போனா நிறைய சம்பாதிக்கலாமே?” அப்படின்னு. எனக்கென்னவோ என்னோட தேவைகளெல்லாம் இங்கேயே கிடைச்சுடுது, உண்மையில அதெல்லாம் வேற எங்கேயும் கிடைக்காது. நானும் எனக்கு சந்தோஷம் கொடுக்கிற காரியங்களை செஞ்சிட்டு வாழ்க்கைய இங்கேயே சந்தோஷமா தான் வாழ்ந்துட்டிருக்கேன். அமெரிக்காவிலிருந்து மங்கோலியா வரைக்கும் எல்லா நாட்டையும் சுத்திப் பார்க்கனும்கிற எண்ணம் எல்லாம் உண்டு தான், ஆனா வெளி நாட்டுல போய் செட்டில் ஆகனும்னெல்லாம் எண்ணம் வந்ததில்லை, அதுக்கான தேவையும் உணர்ந்ததில்ல. அப்படியிருந்தாலும் ஒரு ஒரு சமயம், “ஒருவேளை நாம வெளிநாட்டுக்கு வேலைக்கு போக முயற்சி செய்யாம நிறைய வாய்ப்புகளை தவறவிட்டுட்டு வறோமோ” அப்படின்னு மனசுல ஒரு சஞ்சலம் வந்துட்டே இருக்கும்.

அப்படியிருக்கையில, கொஞ்ச நாள் முன்னாடி அமெரிக்கால இருக்கிற என்னோட நண்பர் ஒருவர் என்கிட்ட சொன்னார், “காசு சம்பாதிக்கனும்கிறதுக்காக வேற வழியில்லாம இங்கே இருந்துட்டிருக்கேன். என்னோட ஆசை என்னன்னா, நம்ம தாய்நாட்டுக்கு தொண்டு செய்யனும், இங்கே இருந்துட்டு நாட்டுக்காக பெருசா ஏதும் செய்ய முடியலையேன்னு எனக்கு ரொம்ப வருத்தம்”, அப்படின்னு. ஆஹா, இங்கே இருக்கவங்கெல்லாம் அங்க போகனும்னு விரும்புறாங்க, ஆனா இவர் என்னன்னா அங்கே இருந்துட்டு கவலைப்பட்டுட்டு இருக்காரே ன்னு நெனச்சேன். அப்ப தான் புரிஞ்சுது, ஒரு ஒருத்தருக்கு ஒரு ஒரு ஆசை, தேவை. நம் எல்லாருக்குமே, நமக்கு இப்ப என்ன தேவையோ அது நமக்கு தவறாம கிடைக்குது. நாம தான் அதை எடுத்துக்காம அடுத்தவனை பார்த்து நமக்கு இல்லாததை நினச்சு வருத்தப்பட்டுட்டு இருக்கோம்.

உண்மையில ஏழைங்கிறது யார்? தன்னோட தேவைகளை புரிஞ்சுக்காதவன் தானே ஏழை? நம்ம அமெரிக்க நண்பர் தன்னோட தேவை, சந்தோஷம் எல்லாம் தாய்நாட்டுக்கு தொண்டு செய்றதுல தான் இருக்குன்னு புரிஞ்சிக்காம அமெரிக்கால போய் குப்பை கொட்டிட்டிருக்கார். அவர் கிட்ட எவ்வளவு பணம் இருந்தாலும் அவருக்கு தேவையானதை அவர் ஒதுக்குறதால அவர் ஏழை தானே? திருவண்ணாமலையில் இருக்கிற ஒரு சன்யாசியை பத்தி கேள்விப்பட்டிருக்கேன். நல்லா பெரிய பெரிய தத்துவமெல்லாம் பேசுவாராம், அவரோட பேச்சை கேட்க அவரோட இடத்துல தினமும் பெரிய கூட்டம் கூடுமாம். அப்படி அவர் பேச்சை கேட்க வர்ற பணக்காரங்க எல்லாம் நெறைய பணம் எடுத்து வந்த அவர் காலில் கொட்டுவாங்களாம், நிறைய பேர் திண்பண்டங்கள், துணிமணியெல்லாம் காணிக்கையா கொண்டு வந்து தருவாங்களாம். சன்யாசி எதையுமே மறுக்க மாட்டார். ஆனா அவருக்கு வரும் காணிக்கைகளெல்லாம் எல்லாம் அப்படி அப்படியே அவரை பார்க்க வர்றவங்க கிட்ட பிரிச்சு கொடுத்திடுவராம், அவர் எதுவும் எடுத்துக்க மாட்டார். பொழுது முடிஞ்சு ராத்திரி படுக்கப் போகும் போது அவர்கிட்ட ஒரு பொருளும் இருக்காதாம். அப்படியே தரையில ஒரு துணியை விரிச்சு கை மேல் தலை வைச்சு நிம்மதியா தூங்குவாராம். அவரோட சொத்தெல்லாம் ஒரு ஓலை குடிசையும் உடம்புல சுத்திக்கிறதுத்கு துணியும் தான். இதுவல்லவா வாழ்க்கை! இவர் ஏன் இப்படி இருக்கார்? ஏன்னா இவருக்கு காசு பணம் எதுவும் தேவையே இல்ல. இவர் வாழற யோக வாழ்க்கையிலேயே இவருக்கு சந்தோஷம் இருக்கு, அது போதும் அவருக்கு. தனக்கு எது தேவை, எது தேவையில்லை ன்னு புரிஞ்சு வைச்சிருக்கிற இவர் தானே நம்ம அமெரிக்க நண்பரை விட பெரிய செல்வந்தர்?

ஆனா எல்லாருமே அந்த சன்யாசி மாதிரி இருந்துட முடியாது. உலகத்துல இருக்கிற எல்லாருமே அவங்கவங்க ஒரு குடிசைய போட்டுட்டு தரையில படுத்து தூங்கிட்டிருந்தா உலகம் என்ன ஆவறது? அந்த சன்யாசியோட தேவை யோகம் செய்து அதிலிருந்து கிடைக்கிற ஞானத்தை மக்களோட பகிர்ந்துக்கிறது. நீங்க வெளிநாட்டுல பொருளாதார ரீதியா நல்ல சுபிட்சமா இருந்துட்டிருந்தா சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க! உங்களுக்கு என்ன தேவையோ அது தான் உங்களுக்கு கிடைச்சிருக்கு. ஆனா அதை அனுபவிக்காம இந்தியாவுக்கு வந்து தொண்டு செய்யனும்னு புலம்பிட்டிருந்தா உங்களை விட ஏழை வேற யாரும் கிடையாது. அந்த மாதிரி புலம்பறதால யாருக்கும் எந்த பயனுமில்ல. அதே மாதிரி, நீங்க ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து பணக்காரராகனும்னு ஆசைப்பட்டீங்கன்னா தாராளமா பணம் சம்பாதிக்கிற முயற்சியில ஈடுபடுங்க. அடிமட்டத்திலிருந்து சொந்த முயற்சியால பெரிய உயரங்களையெல்லாம் தொடும் அந்த அனுபவத்தை அனுபவிக்கிறதுக்காக தான் நீங்க உலகத்துல இந்த நிலைமையில வந்து பொறந்திருக்கீங்க. பணம் சம்பாதிக்க என்னென்ன வழிகள் இருக்குன்னு தெரிஞ்சிகிட்டு உங்க சக்திகளையெல்லாம் அதில் செலவிட்டு பெரிய ஆளா வருவதற்கு என் வாழ்த்துக்கள். ஆனா உங்களுக்கு கிடைச்சிருக்கிற இந்த வாய்ப்பை விட்டுட்டு “கடவுளே, என்னை ஏன் ஏழையா படைச்சே?”, அப்படின்னு புலம்பிட்டிருந்தா நீங்க வாழ்க்கை பூரா புலம்பிட்டே தான் இருப்பீங்க. ஆனாலும் ஒருசிலர் இருக்காங்க, அவங்களோட சந்தோஷமே புலம்பறதிலே தான் இருக்கு, பார்த்தீங்கன்னா, அவங்களுக்கு என்ன தேவையாயிருந்தாலும் அதையெல்லாம் பூர்த்தி செஞ்சிக்க கூடிய வசதியெல்லாம் இருக்கும். ஆனாலும் தான் கஷ்டப்படுறதா கற்பனை பண்ணிட்டு அதை மத்தவங்க கிட்ட சொல்லி சொல்லி அழறதிலே தான் அவங்களுக்கு பரம் சந்தோஷம். அவங்க புலம்பலிலேயே சந்தோஷத்தை காணட்டும்… அவங்களையெல்லாம் திருத்தவே முடியாது.

உலகத்திலேயிருக்கிற எல்லா மனுஷங்களுமே பணக்காரங்களாயிட முடியாது. அடிப்படையான பொருட்கள் எல்லாருக்குமே கிடைக்கினும்கிறதுல எந்த மறுப்புமே கிடையாது. ஆனா எல்லோருக்குமே பணக்காரராகனும்கிற தேவை கிடையாது. சிலருக்கு பணம் தேவையா இருக்கலாம்… சிலருக்கு தன்னோட ஞானத்தை வளர்த்துகிறதே முதல் தேவையா இருக்கலாம். சிலருக்கு தொண்டு செய்து அதனால கிடைக்கிற ஆத்ம திருப்தி தேவையா இருக்கலாம்… சிலருக்கு தன் செல்லப் பூனையை தடவிக்கொடுக்கிறதுல கிடைக்கிற சந்தோஷமே ஏழேழு ஜென்மத்துக்கும் போதும். இது எதுலையுமே தப்பு இல்ல. நாம் நம்மோட தேவையை தெளிவா புரிஞ்சிட்டு , நாம் வாழும் வாழ்க்கை எப்படிப்பட்டதா இருந்தாலும் அதை 100% அனுபவிச்சு சந்தோஷமா வாழறோமா? அது தான் முக்கியம். அதை விட்டுட்டு அடுத்தவன் தேவையை தன் தேவையா தப்பா புரிஞ்சிட்டு அடுத்தவன் வாழற வாழ்க்கையை பார்த்து பொறாமைப் படுறதாலதான் உலக்திதுல எவ்வளவு துன்பம். எல்லாருமே இஞ்சினியர் ஆகனும், எல்லாருமே வெளிநாடு போகனும், எல்லாருமே கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துட்டு கண்ணை கசக்கிக்கனும்… ஏதோ ஒரு விஷயத்தை மட்டும் எடுத்திட்டு அதுக்காக ஒரு கோடி பேர் போட்டி போடறோம். அந்த போட்டியில ஜெயிக்கிறவங்க எல்லாருமே சந்தோஷமா இருக்காங்களா? அதுவும் இல்லை. உலகத்தில இருக்கிற எல்லாருமே தன்னோட தேவை என்னன்னு சரியா புரிஞ்சிட்டு வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்தா எல்லாருடைய தேவைகளுமே பூர்த்தி செய்யப்பட்டுவிடும் தானே? அது தானே சுபிட்சமான சமூகம். யாருமே சொத்து வைச்சுக்கக் கூடாதுன்னு சொல்ற சமூகமோ, அல்லது எல்லாருமே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்கிற நிலைமையை ஏற்படுத்தி, ஒருவர் பணம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை வைச்சே அவரோட வாழ்க்கைத் தரத்தை நிர்நயிச்சு தரம் பிரிக்கிற சமூகமோ சரியான சமூகமாக இருக்க முடியாது. ஒருவரோட பாங்க் அக்கவுன்ட்ல எவ்வளவு பணம் நிறைஞ்சிருக்குங்கிறத வைச்சு அவர் வாழ்க்கைத் தரத்தை நிர்நயிக்க முடியாது. அவர் மனம் எவ்வளவு நிறைவா இருக்கிங்கிறதை வைச்சு தான் முடியும்.

தன்னோட தேவை என்னன்னு தெளிவா புரிஞ்சுகிட்டு தனக்கு கிடைச்ச வாழ்க்கையை முழுமையா அனுபவிச்சு வாழறவன் தான் உண்மையான செல்வந்தன். தனக்கு வாழ்க்கையில் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்திக்க தெரியாம, தன்னோட தேவையை சரியா புரிஞ்சிக்காம தேவையில்லாததெல்லாம் அடைய முயற்சி செய்து கஷ்டப்படறவன் தான் பரம ஏழை. அப்படித்தான் நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?
——————————————————————————————
I am not the author of this post, I read in “சிறுதுளி” by Srinivasan, Chennai. It exactly matches with my thoughts and Sini did a great job of putting that into a nice posting, I wanted to copy paste in my blog. As a S/W engg we have used to copy paste a lot na….

Copy Right: Srinivansan – சிறுதுளி – http://srinig.wordpress.com

Thank you srini.

மறுமொழிகள் (2) »

என்னுடன் பேசு…

மலைக் காற்று வந்து தமிழ் பேசுதே…
மழைச் சாரல் வந்து இசை பாடுதே…
மலர் ஓடி வந்து உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி….

(வேதம் படம் பாடல்)

முதல் மூன்று வரிகளில் இயற்கை வந்து தன்னிடம் பேசுவதாகவும், தலைவியும் பேச வேண்டும் என்று சொல்லுவதாக அமைந்துள்ள பாடல். என்ன ஒரு கற்பனை…

மறுமொழி அளிக்கவும் »

இழந்த மகிழ்ச்சி….எதைத் தேடி?

sugi

By Sugi Sivam.

மறுமொழி அளிக்கவும் »

பொருளை தேடுவதில் வாழ்க்கையைத் தொலைத்த வல்லுனன்

எழுந்துவிட்ட அதிகாலை,
எழுப்பிவிட்ட கடிகாரம்,
காத்திருக்கும் கடமை,
இன்னும் உறங்கும் நண்பன்,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,

நாளைய காலையின் விழிப்பிலாவது

தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு…..

இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

மென்பொருள் வல்லுனன் .
(பொருளை தேடுவதில் வாழ்க்கையைத் தொலைத்த வல்லுனன்)

(Forwared msg, Thanks to Siva – my MCA classmate)

மறுமொழிகள் (2) »

Follow

Get every new post delivered to your Inbox.